உறவுகள் (மே 2014) நாவலிலிருந்து… இரவெல்லாம் கண்விழித்து படித்ததை நினைவில் வைத்து ‘படித்தது மட்டுமே வரவேண்டும்’, எனும் மந்திரத்தை உதடுகள் உச்சரித்து தேர்வெழுதச் செல்லும் அதிகாலை நேரம்! வினாத்தாளைத் தொடாமல் கண்கள் வெறிக்க, விடைத்தாளைப் பட்டும் படாமல் பேனா முத்தமிட மூளையோ…
தாய்மை
அன்பென்ற மொழியிலே (ஏப்ரல் 2013) நாவலிலிருந்து… அகம் மயங்கிய தருணத்தில் உருவானாய்! என்னை சரி பாதியாய் கொண்டு என்னில் கருவானாய்! பெருகி வளர்ந்து, கவலைகள் அனைத்தையும் அண்டவிடாமல் அகற்றினாய்! அசைந்து, உருண்டு மனம் நிறைய பரவசத்தை தடையில்லாமல் புகட்டினாய்! உதைத்து, விளையாடி,…
பயணம்
தந்தையின் கைப்பிடித்து அன்னையின் மடி சாய்ந்து அண்ணனிடம் சண்டையிட்டு ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்து சென்ற பயணம், தித்திக்கும் பயணம்! தந்தை இறங்கித் தண்ணீர் வாங்கச் செல்ல ஓட்டுனர் வண்டியை கிளப்ப முயல அச்சசத்தில் என் சுற்றுப்புறம் மறக்க, என் தந்தை…
முதல் பிரிவு
என் அன்னையை, பிரிய நேர்ந்த முதல் நாள்! பள்ளிக்கூடத்தில், நான் சேர்ந்த அந்த நாள்! *நான் அழுது புரண்டது என் ஆசிரியர் மிரட்டியது தோழர்-தோழியர் தேற்றியது எதுவும் நினைவிலில்லை. *பிரிவைத் தாளாமல் கண்களில் நீர் படர தனித்து விட முடியாமல் மனம்…
முதல் வேலை
பனி படர்ந்த காலை வேளையில் கானம் பாடி கண்களில் மகிழ்ச்சி கலந்த பய ரேகை சூடி, நெஞ்சினில் பந்தய குதிரையின் வேகம் கூடி பரவசத்துடன் கூடிய அவசரத்துடன் ஓடி என் இருக்கையை ஆர்வத்துடன் நாடி பணி செய்யும் என் முதல் வேலை…
மழை…
மூடுபனி நெஞ்சம் (அக்டோபர் 2015) நாவலில் இருந்து… விண்ணில் தொடங்கி என் மூச்சுக்குழலில் இறங்கினாயோ நெஞ்சமதில் வாசம் கொண்டாயோ! விட்டு, விட்டு விழுகிறதே பட்டு, பட்டுத் தெறிக்கிறதே உன்னை விடாமல் தொட்டுவிட நெஞ்சமது துடிக்கிறதே! கண்ணோடு மணியாக நெஞ்சோடு உன் வாசம்…
விடுமுறை
மின்மினிக் கனவுகள் (மார்ச் 2017) நாவலில் இருந்து… தங்கையாய், தம்பியாய் என் வானில் பறந்த சித்தியின் பிள்ளைகளைக் காணச் செல்லும் பள்ளி விடுமுறை! களைப்பில் இரவு பெரியவர்கள் உறங்க களிப்பில் சிறியவர்கள் கத்தி முழங்க என்ன பேசினோம் என்றே தெரியாமல் கதைத்து…